சிறப்பு:
இந்த அன்பின் மொழி. முதியோர்களை மட்டும் வைத்துக்கொள்வதல்ல. பேரக்குழந்தைகளாக அனாதை குழந்தைகளையும். மாற்றுத்திறனாளிகளையும். மகளாக கைம்பெண்களையும் தன்னகத்தே வைத்துக்கொள்ள தாராள இடமளிக்கிறது. இதனால் சிறு குழந்தைகளுக்கு தாத்தாவும் பாட்டியும் பெண்களுக்கு அம்மாவும் அப்பாவும் கிடைப்பது மட்டுமல்லாமல், அன்பின் பாலம் உறுதிப்பட்டு உயர்ந்து நிற்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
இங்கு உணவுக்கென்று நேரம் கிடையாது. உறங்குவதற்க்கென்று காலம் கிடையாது. எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் பசி தீர்ப்போம். எப்போதெல்லாம் உறக்கம் வருகிறதோ, அப்போதெல்லாம் உறங்கி விழிப்போம். காப்பாளரின் கண்ணியமும், தாத்தா பாட்டியிடம் கதை கேட்கும் புண்ணியமும், அன்பின் மொழியால் நிரம்பும், அதையே இது தன் வீடு என அத்தனை மனமும் விரும்பும்.
இந்த அன்பின் கூட்டில் அதற்கென்று இதற்கென்று தனித்தனியாய் எதற்கென்றும் பணம் வசூலிப்பதில்லை. இந்த கூட்டு குடும்பம் என்கிற இந்த அன்பின் மொழி அறக்கட்டளை வானளவு உயர்ந்து நிற்கட்டும், கட்டிடங்களால் அல்ல. ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் அன்பினால். ஆம் இது அன்பின் மொழி..! ஆயுளின் ஒளி…!

"This foundation transformed my lonely life into one filled with care, respect, and warmth. Truly a blessing!"